கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

2 months ago



கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளைத் தூக்கிக் கொண்டு வீதியின் மறுமுனைக்குச் செல்ல முயற்சித்தபோது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்புபட்டியிருந்ததாகவும், ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் பெயர் பகீரதன் என்றும், அவர் யாழ்ப்பாணம், நீர்வேலியைப் பூர்வீகமாக கொண்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.



அண்மைய பதிவுகள்