வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானைக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
4 months ago

வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானைக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா குடாகச்சக் கொடி வயல் வெளியில் சுகவீனம் காரணமாக வீழ்ந்து கிடந்த யானை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் அண்மையில் மீட்கப்பட்டது.
இதற்கு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு் வரும் நிலையில் அதன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எட்டு வயது மதிக்கத்தக்க குறித்த யானை, மோசமான காலநிலை காரணமாக வயலில் தவறி விழுந்ததாக வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கூறினர்.
இதேவேளை, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வட மாகாணத்துக்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி பா. கிரிதரனின் தலைமையில் குறித்த யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
