நீர் வழங்கல்துறை அமைச்சுக்கு அமைச்சர் இல்லாததால் மாதாந்தம் 30 இலட்சம் ரூபாயை சேமித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்தன.
5 months ago

நீர் வழங்கல் துறை அமைச்சரின் பணிமனை செலவுகள் தற்போது அமைச்சர் இன்மையாலேயே மாதம் 30 இலட்சம் ரூபாயை சேமிக்க முடிகிறது என்று அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், முன்னாள் அமைச்சரின் ஆட்சி காலத்தில் அமைச்சர் மற்றும் அவரின் பணியாளர்களுக்கான எரிபொருள், உணவு போன்றவற்றுக்காக செலவிடப்பட்ட தொகையே தற்போது சேமிக்கப்படுகின்றது என்று கூறிய அவர், முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களாக 20 பேர் பணியாற்றினர் என்றும் கூறினார்.
முன்னர், நீர் வழங்கல் அமைச்சராக ஜீவன் தொண்டமான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
