அடுத்த ஆண்டில் குடியிருப்பு சொத்துகளுக்கு விதிக்கப்படும் வரியின் பிரகாரம் வாடகை வீடுகளுக்கு வருமானவரியை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இலங்கையுடனான கடன்வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துவரி முறையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சட்டக் கட்டுப்பாடுகளின் தாமதம் காரணமாக இந்தப் புதிய வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்தும் யோசனையை சர்வதேச நாணயநிதியம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.