இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள். ஜனாதிபதி அனுராவிடம் கோரிக்கை விடுகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள். ஜனாதிபதி அனுராவிடம் கேட்கும் உண்மையான கோரிக்கை இது தான்.
உடனடியாக அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். அதற்காக தேர்தல் வரும்வரை காத்திருக்க வேண்டாம்.
தமிழர் நிலங்களை மீட்டுத் தருவேன் என அனுர உண்மையாக நினைத்தால், முக்கியமான முதல் நடவடிக்கையாக மணல் ஆறு நிலத்தை தமிழர்களுக்கு திருப்பி வழங்கவேண்டும்.
இந்த நிலம், ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியில் தமிழர்களின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் இடையிலான தொடர்பை துண்டிக்க திட்டமிட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல வாக்குறுதிகளை அளித்தார்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் தமிழர்களின் நிலங்களை விடுவிப்பதாகவும் கூறினார்.
அதனை தேர்தலுக்கு முன்னர் செய்ய வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவினர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வவுனியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு கூறினர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது
தமிழர்கள் முந்தைய சிங்கள அரசு காலங்களில் துன்பத்துக்கு உள்ளாகினர் என்பதை அனுர உணர்ந்து கொண்டால், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை ஏற்கவும், தமிழர்களை ஒடுக்குவதற்கான பயங்கரவாத சட்டத்தை நீக்கவும் வேண்டும். - என்றனர்.