காற்றின் மாசு தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.சாவகச்சேரி, வட்டுக்கோட்டையில் வளித்தர கண்காணிப்பு நிலையங்கள்

2 weeks ago



யாழ்ப்பாணத்தில் காற்றின் மாசு தொடர்பில் ஆராய்வதற்காக சாவகச்சேரி மற்றும் வட்டுக்கோட்டையில் வளித்தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதனூடாக வளியின் தற்போதைய நிலை குறித்து கொழும்புக்கு அறிக்கையிடப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுள்ளது எனவும் இதனால் பொதுமக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.

அத்துடன். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்துக்குத் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கொழும்பிலிருந்து வருகை தந்த குழு சாவகச்சேரி மற்றும் வட்டுக்கோட்டையில் வளித்தர நிலையங்களை அமைத்துள்ளதோடு எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அண்மைய பதிவுகள்