சாவகச்சேரி வைத்தியசாலையை குழப்பும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

6 months ago

சாவகச்சேரி ஆதார வைத்தியசா லையின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்து தமது தனிப்பட்ட குரோதங்களை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட பிரதிநிதிகள் சிலர் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை யின் புதிய பதில் பொறுப்பு வைத்தியரின் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை ஸ்தம்பிக்க செய்யும் வகையிலும் அவரை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் சில வைத்திய அதிகாரி கள் சங்க வைத்தியர்கள் செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் மக்களுக்கு பயன்படுத்தப்படாத வளங்கள் தொடர்பில் புதிய பொறுப்பு வைத் தியர் பதவியேற்றதன் பின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டார்

அவரது செயற்பாடுகளை விரும்பாத சில வைத்தியர்கள் அவரை அங்கிருந்து அகற்றுவதோடு சில மருத்துவ மாபி யாக்களுக்கு வருமானத்தை ஈட்டி கொடுப்பதற்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை ஸ்தம்பிக்க வைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையை திறம்பட இயக்குவதற்கு சில மருத்துவ மாப்பியாக்கள் அழுத்தங்களை கடந்த காலங்களில் வழங்கியது போன்று புதிய வைத்தியருக்கும் வழங்கும் முயற்சி தோல்வி கண்டமையே புதிய பொறுப்பு வைத்தியரை அகற்று வதற்கான சூழ்ச்சியின் ஆரம்பமாகும்.

மருத்துவ நிர்வாகத்தில் பட்டம் பெற்ற குறித்த பொறுப்பு வைத்தியர் குறித்த வைத்தியசாலையை பொறு பெடுத்த சில வாரங்களுக்குள் மகப் பேற்று விடுதி சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கும் நிலையில் ஏன் கற்பவதிகள் யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென தனது முகநூலில் கருத் துக்களை முன்வைத்திருந்தார்.

ஆகவே குறித்த வைத்தியரின் கடமை உணர்வையும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளையும் தடுத்து தமது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு செயற்படும் சில வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் தொடர்பில் ஏனைய வைத்தியர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர் 


அண்மைய பதிவுகள்