தாய்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.
4 months ago
தாய்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட சிறிய உள்நாட்டு பயணிகள் விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாங்கொக்கிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கியது அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் விமானம் விழுந்து நொருங்கிய பகுதியில் உயிருடன் எவரும் மீட்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் தேடுவதற்கு மிகவும் கடினமாக பகுதியில் சிதைவடைந்த உடல்பாகங்களை மீட்டோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஹொங்கொங்கை சேர்ந்த ஐந்து சீன பிரஜைகள் சுற்றுலாப் பயணிகள் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன