இலங்கை அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பெரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாடு கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது.
தெற்காசியப் பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை அம்பாந்தோட்டையில் உருவாக்கி அந்தப் பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதற்கான திட்டமாகவே இது உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இது குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக துறைமுக நகர் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக துரிதப்படுத்த சீனா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.