முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்த தடை குஷானி ரோஹனதீர தெரிவிப்பு

3 months ago


பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்த தகுதியற்றவர்கள் என பாராளு மன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமாயின், சாதாரண கடவுச்சீட்டின் மூலம் பயணிக்க      முடியும் என அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், இராஜதந்திர கடவுச்சீட்டுகள், கொடுப்பனவுகள், தொலைபேசி கொடுப்பனவுகள் உள்ளிட்ட சலுகைகளும் இரத்து செய்யப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.