பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்பத்தினரை பணியாளர்களாக நியமிக்க முடியாது.-- பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
5 months ago

புதிய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்த பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படும்.
உத்தியோக பூர்வ இல்லங்கள் உட்பட ஏனைய வசதிகள் மட்டுப்படுத்தப்படும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களின் பணியாளர்களாக நியமிக்க முடியாது.
ஏற்றுக்கொள்வதற்கு - தாங்கிக் கொள்வதற்கு கடினமான விடயமாக ஊழலின் முடிவு காணப்படலாம் - என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
