யாழ் வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் மஹோற்சவத்தின் ஏழாம் (09) நாள் வெண்ணைத்தாழி திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் மஹோற்சவத்தின் நேற்று(09) ஏழாம் நாள் வெண்ணைத்தாழி சேவை திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றன
இந்த மஹோற்சவத்தில் பத்து நாட்கள் திருவிழாவில் கடந்த 03.10.2024 கொடியெற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் 10.10.2024 எட்டாம் நாள் திருவிழாவாக குதிரை வாகன சேவையும் ஒன்பதாவது நாள் 11.10.2024 இரதோற்சவமும் 12.10.2024 பத்தாம் நாள் தீர்த்தோற்வத்துடன் இனிதே மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் நிறைவடையும்.
12.10.2024 திருக்கல்யாண வைபவத்துடன் நடைபெறும்.
இந்த மஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு செ.ரமணீதரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் நடாத்தி வைத்தனர்.
கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் சீதேவி, பூமாதேவிக்கு விஷேட அபிஷேக ஆராதணைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் ஸ்ரீவேங்கட வரதராஜப்பெருமாள் வெண்ணைத்தாழி சேவையில் அலங்கார மனைப் பீடத்தில் எழுந்தருளி வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..
இதில் வானவேடிக்கையுடான நிகழ்வும் இடம்பெற்றது.