2025 தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். ஜனாதிபதி தெரிவிப்பு

2 weeks ago



அடுத்த வருடம் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று(20) வெள்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்துக்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

"தேர்தல் காலங்களில் நாம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம்."என்றும் அவர் உறுதியளித்தார்.

அண்மைய பதிவுகள்