ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

5 months ago


நேற்று (21) இரவு 10 மணி அளவில் மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பொத்தாய - ஜுலம்பிட்டிய வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டின் இலக்காக அமைந்துள்ளார்.

கடையை மூடிவிட்டு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் குறித்த நபரின் மனைவியும் காயமடைந்துள்ளார்.

இருவரும் சிகிச்சைக்காக மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மனைவி எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைய பதிவுகள்