கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் புதிய சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் புதிய சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவில் விவசாயம், மீன் மற்றும் கடல் உணவு பதப்படுத்தப்படும் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்ய புதிய தொழிலாளர் நெறி முறையை கனேடிய அரசாங்கம் உருவாக்க வுள்ளது.
இது, கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் நிகழும் மோசடி மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்க வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், இந்த துறைகளில் நேர்மையை மேம்படுத்தி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர் களின் உரிமைகள் பாதுகாக்கப் படும்.
மேலும், தொழிலாளர்கள் குறைவான ஊதியத்தில் 20 வீதத்தைத் தாண்டக் கூடாது என்ற விதியை கடுமையாக பின்பற்றவும், கட்டணங்களை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலை தரும் முதலாளி களின் தகுதிகள் தீவிரமாக பரிசீலிக் கப்படவுள்ளன.
தற்காலிக வெளிநாட்டு தொழி லாளர் திட்டம், கனடாவில் உள்ள பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான வழிமுறையாகும்.