கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை ஆளுநர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
6 months ago



கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக ஆயிரத்து 124 பாட சாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதல் கட்டமாக திருகோணமலையில் 348 பாட சாலைகளுக்கு சூரிய மின் தகடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத நிலையில் பல பாடசாலைகள் உள்ளன என்ற விடயம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு செல் லப்பட்டது.
இதையடுத்தே, கிழக்கு மாகாணத்தில் 1,124 பாடசாலைகளில் சூரிய மின்சக்தி திட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
