2 மில்லியன் 'சிம்'கள் பதிவின்றிப் பாவனையில், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு
9 months ago
இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் உள்ளன. இதனால் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பிரச்சினை எழுகிறது என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டை களைப் பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டைகள் கோரப்படவில்லை.
புதிய சட்டத்தின்படி சிம் அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு அடையாள அட்டை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
அதனடிப்படையில், 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் அட் டைகள் தற்போது பாவனையில் உள்ளன. இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
