வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக் கொள்கையும் - இரு மொழி புத்தக வெளியீடு நாளை(30)
வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக் கொள்கையும் - Northern Province Water Resources and their Utiliz ation Policy and Strategies" இரு மொழி புத்தக வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை பிற்பகல் 4. 30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் பேராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளை தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்துகொள்வார்.
புனர்வாழ்வு அமைச்சின் முன்னாள் செயலாளர் எந்திரி வே. இரகுநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சு.ராஜதுரை, வவுனியா பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் யோ. நந்தகோபன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் க. பத்மநாதன் ஆகியோர் நூல் ஆய்வுரைகளை வழங்குவர்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன், வடக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ம. ஜெகூ, யாழ்.பல்கலைக்கழக (கிளிநொச்சி) பொறியியல் பீட பேராசிரியர் தி. திருவரன், பொறியியல் சேவைகள் பதில் பிரதிப் பிரதம செயலாளர், எந்திரி ந. சுதாகரன், யாழ். பல்கலைக்கழக (கிளிநொச்சி) பொறியியல் பீடத்தைச் சேர்ந்த கலாநிதி பா. கேதீசன், கலாநிதி ப. கதிர்காமநாதன், வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் எந்திரி த. ராஜகோபு ஆகியோர் கலந்துகொள்வர்.