ஒன்றாரியோவில் வகுப்பில் மாணவர்கள் பயன்படுத்தும் கைபேசிக்கு தடை.

4 months ago


அடுத்த வாரம் வகுப்புகள் மீண்டும் தொடங்கும் போது நடைமுறைக்கு வரும் புதிய கைபேசி தடை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் விளம்பரப் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. வரும் கல்வியாண்டில், மழலையர் பள்ளி முதல் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், கல்வியாளரால் அனுமதிக்கப்படாவிட்டால், நாள் முழுவதும் தங்கள் கைபேசிகளை அமைதியாகவும், பார்வைக்கு வெளியேயும் வைத்திருக்கும்படி கேட்கப்படுவார்கள்.

7 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலை வளாகத்தில், வகுப்பு நேரத்திற்கு வெளியே மாத்திரமே கைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

'இது ஒரு புதிய முயற்சி' என்று மாகாணத்தின் புதிய கல்வி அமைச்சர் ஜில் டன்லப் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

இந்த இலையுதிர் காலத்தில் ஒன்ராறியோவின் பொதுப் பாடசாலைகளில் வரவிருக்கும் பல மாற்றங்கள் குறித்து இதன்போது அவர் கருத்து வெளியிட்டார்.

'ஆசிரியர் கைபேசிகளை வைக்க அல்லது அணைக்கச் சொன்னால், மாணவர்கள் அந்த விதிகளுக்கு இணங்கவில்லை என்றால், வகுப்பறையில் பாதுகாப்பான இடத் தில் கைபேசியை வைக்கும்படி கேட்கப்படுவார்கள். மாணவர்கள் அதைப் பின்பற்றவில்லை என்றால், அவர்கள் அதிபரின் அலுவலகத்திற்குச் செல்லுமாறு கேட்கப்படுவார்கள்' என அமைச்சர் டன்லப் தெரிவித்தார்.