நரபலி கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் விதமாக மட்டக்களப்பில் மயானம் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

3 months ago


நரபலி கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் விதமாக மட்டக்களப்பில் மயானம் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தேற்றாத்தீவிலுள்ள மயானத்திலிருந்து நேற்று வெள் ளிக்கிழமை சடலம் ஒன்றை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மீட்டனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அண்மையாக மாந்திரீக பூசை வழிபாடு நடைபெற்றமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. இதனால், சடலமாக மீட்கப்பட்டவர் நரபலி கொடுக்கப்பட் டாரா என்று சந்தேகம் எழுப்பப்பட் டது.

சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதால் சடலத்துக்கு உரியவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.