உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரே விசாரணையை திசைதிருப்பினர்! நர்ஷானி அபேசேகர தெரிவிப்பு.

3 months ago


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை இராணுவ புலனாய்வு பிரிவினரே தவறாக வழிநடத்தினர். வவுணதீவு பொலிஸார் படுகொலைகளை புலிகளே செய்தனர் என்று கூறி அவர்கள் 4 தடவைகள் திசை திருப்பினர் என்று குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரியவின் நூல் வெளியீட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், விசாரணைகளின் முக்கிய தருணங்களின்போது

இராணுவ புலனாய்வாளர்கள்    சி.ஐ. டியினரை தவறாக வழிநடத்தினார்கள் என்று தெரிவித்துள்ள அவர், புலனாய்வு அமைப்புகளுக்கும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் நிதித் தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி 250 பேரை பலிகொண்ட தாக்குதல் தனித்த ஒரு சம்பவமல்ல. நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. 

விசாரணைகளின்போது இராணுவ புலானய்வுப் பிரிவினர் இரண்டு தடவை விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றனர்.

தெகிவளையில் உயிரிழந்த      தற்கொலை குண்டுதாரி தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தினார்கள்.

அந்த தற்கொலை குண்டுதாரிக்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பிருக்கலாம் - இது மறைக்கப்பட்டது.

இரண்டாவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு படுகொலைகளை (2018) விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குற்றஞ்சாட்டினார்கள்,

தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக இராணுவ சீருடையை அங்கு மறைத்து   வைத்தனர்.

ஏப்ரல் 25ஆம் திகதி இந்த                 படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை சி. ஐ. டியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான சஹ்ரான் ஹாசிம் குழுவினர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர், தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தாக்குதலுக்கு இலங்கையின் புலனாய்வு பிரிவினர் நிதி உதவி செய்தனர்.

இது குறித்து முழுமையாக விசார ணைகளை மேற்கொள்ளவேண்டும்.

வவுணதீவு கொலையை விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என நான்கு தடவை இராணுவப் புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள். இதற்கான நோக்கம் என்ன - என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அண்மைய பதிவுகள்