யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்து உரிய சிகிச்சை பெறாததால் மூதாட்டி மரணம்!

4 months ago


யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வண்ணார்பண்ணையைச் சேர்ந்த மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த நிலையில் உரிய சிகிச்சைபெறாமல் அவர் தவிர்த்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

சில வாரங்களுக்கு பின்னர் மூதாட் டிக்கு தோல் வருத்தம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று உயிரிழந்தார்.

மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அண்மைய பதிவுகள்