நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இவருடன், கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூவர் தலைமறைவாகினர்.
இவர்களை, பொலிஸாரும் இளைஞரின் உறவினர்களும் தேடி வந்தனர்.
தலைமறைவான மூவரும் நெடுந்தீவில் பற்றைக்குள் மறைந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைதான மூவரும் நேற்று முன்தினம் இரவே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
