இலங்கை மின்சார சபையில் பொருளாதாரக் கொலையாளிகளை ஜனாதிபதி நீக்க வேண்டும்.-- மின்சார பாவனையாளர் சங்கம் கோரிக்கை
3 months ago

இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதாரக் கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மின்சார பாவனையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் அந்தச் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
அதிக இலாபத்தை ஈட்டியுள்ள மின்சார சபையால் சுமார் 40 வீதமாக சலுகைகளை பாவனையாளர்களுக்கு வழங்கமுடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
தற்போது இலங்கை மின்சார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர். இவ்வாறான பொருளாதாரக் கொலையாளிகளைக் கண்டறிந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
