இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு.

3 months ago


இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (18) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முறைப்பாடு எதுவுமின்றி மருத்துவர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் 7 நாட்களுக்கு சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடியை பறக்கவிட தீர்மானித்துள்ளதாகவும் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.