டிஜிற்றல் பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றது.
2 months ago
இலங்கையில் தற்போது பேசு பொருளாகியிருக்கும் டிஜிற்றல் பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றது.
கணிதநெறி ஆசிரிய மாணவன் செ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய கடன்துறை மேலாளர் ம. தயாகரன் அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்டு டிஜிற்றல் பொருளாதாரம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இவருக்கான அறிமுகவுரையை கலாசாலை விரிவுரையாளர் கு. பாலஷண்முகன் ஆற்றினார்.
விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவி வீரராகவன் மயாதேவி கல்வித்துறையில் தொழினுட்பப் பயன்பாடுகள் என்ற பொருளில் ஆசிரிய மாணவர் உரையை வழங்கினார்.
கலாசாலை அதிபர் சந்திர மௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.
அதிதிப் பேச்சாளர் ம. தயாகரன் கலாசாலை முகாமைத்துவக் குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.