அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ் மைக்கல் மர்பி (USS Michael Murphy)என்ற கப்பல் இலங்கை வந்துள்ளது.
5 months ago
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி (USS Michael Murphy)என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
155 மீட்டர் நீளமுள்ள, இந்த ஏவுகணை அழிப்பான் கப்பல் 323 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கப்பலின் தலைவர் ஜொனாதன் பி கிரீன்வால்ட், இலங்கையின் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்தித்துள்ளார்.
யு.எஸ்.எஸ் மைக்கேல் மர்பி தீவில் தங்கியிருக்கும் போது, கப்பலின் உறுப்பினர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்த கப்பல் ஜூலை 26 ஆம் இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது.