வவுனியா கனகராயன்குளம் அபிவிருத்திச் சங்க காணியை பொலிஸாரிடமிருந்து விடுவிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராய்வு
வவுனியா கனகராயன்குளம் தெற்கு அபிவிருத்திச் சங்கத்தின் காணியை பொலிஸாரின் பாவனையில் இருந்து விடுவிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, வவுனியா மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும், கனகராயன்குளம் தெற்கு அபிவிருத்திச் சங்கத்தின் காணியை பொலிஸாரின் பாவனையில் இருந்து விடுவித்தல் தொடர்பாகவும், பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பது உட்பட பல்வேறு மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்குரிய தீர்மானங்களும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன், ப. சத்தியலிங்கம், து. ரவிகரன், முத்துமுகமது மற்றும் மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ்குமார், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள்,
பொலிஸார், இராணுவத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.