தமிழீழ பெண்கள் உதைபந்தாட்ட அணியினர் கனடா திரும்பியுள்ளனர்

6 months ago
தமிழீழப் பெண்கள் உதைபந்தாட்ட அணியில் கனடாவில் இருந்து சென்று பங்கேற்ற எட்டு வீராங்கனைகள் நாடு திரும்பியுள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான உலக பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் கனடாவில் இருந்து சென்று பங்கேற்ற தமிழீழ அணியின் எட்டு வீராங்கனைகள் நாடு திரும்பியுள்ளனர். 

2024ஆம் ஆண்டுக்கான கொனீபா மகளிர் உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டி நோர்வே நாட்டில் நடைபெற்றது.

இந்த தொடரில் தமிழீழ அணியின் சார்பில் கனடியத் தமிழ் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

கனடியத் தமிழர்களான ஐந்து வீராங்கனைகள் அணி முகாமையாளர் அணி உதவி முகாமையாளர் அணி மருத்துவர் ஆகியோர் ஜூன் மாதம் 10ஆம் திகதி கனடா திரும்பினர்.

கால்பந்தாட்ட வீராங்கனைகளான ப்ரீத்தி சுரேஷ்குமார், பிரிந்திகா ஐங்கரமூர்த்தி, மாயா சத்யன், ஓவியா சத்யன் மெலனி சுரேஷ்குமார் ஆகியோருடன் அணி முகாமையாளர் சங்கரி ஸ்ரீதயாகுமார்,அணி உதவி முகாமையாளர் அகனி சிதம்பரநாதன், அணி மருத்துவர் அபி சண்முகரத்தினம் ஆகியோர் கனடா திரும்பினர்.

இவர்களுக்கு டொரன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த குடும்பத்தினர் நண்பர்களால் வரவேற்பு வழங்கப்பட்டது.

அண்மைய பதிவுகள்