சுமார் மூன்றில் ஒரு கனேடியர்கள் பயண மோசடிகளில் சிக்குகின்றனர் என கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

3 months ago

சுமார் மூன்றில் ஒரு கனேடியர்கள் பயண மோசடிகளில் சிக்குகின்றனர் என கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கருத்து கணிப்பானது, ப்ளைட் சென்டர் கனடா என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மோசடிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

அதன்போது, பயண முகவர்கள் போன்று தோன்றி இணை வழியின் ஊடாக கனேடியர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வாறான மோசடிகளில் இருந்து விழிப்புடன் இருக்ககுமாறு துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.