சுங்க திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் 4 பேருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை.-- இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்தது
2 months ago
சுங்க திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (06) தீர்ப்பளித்தது.
இதன்போது, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கும் எதிராக தலா 125 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரிப்பாகங்களை விடுவிப்பதற்கு கொழும்பு, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.