ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் யாழ்.சென்னை விமான சேவைக் கட்டணம் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரிப்பு
ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான சேவைக் கட்டணம் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்னர் 45 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் சென்னை இருவழிப் பயணச்சீட்டு தற்போது ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமானப் பயணச்சீட்டின் விலை அதிகரிப்புக்காக ஐயப்ப பக்தர்கள் தமது அதிருப்தியையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.
நேர்த்திக்கடன் செலுத்துவதற்குச் செல்வதற்குத் தாம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசாங்கம் விமானசேவை நிறுவனங்களிடமிருந்து அறவிடும் வரியை ஜனவரி மாதம் 30ஆம் திகதிவரை குறைப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.
எனினும், இந்த விலைக் குறைப்பு விமானப் பயணச்சீட்டின் விலைகளில் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தாது என்று விமானசேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.