இலங்கையின் ஆயிரத்து 750 கோடி டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வணிக கடன் வழங்குநர்களுடன் இணக்கம்.
இலங்கையின் ஆயிரத்து 750 கோடி டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வணிக கடன் வழங்குநர்களுடன் இணக்கம் நேற்று எட்டப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயல்திட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமையவே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
சீன அபிவிருத்தி வங்கியுடன் 330 கோடி டொலர் பெறுமதியான கடன் களை மறுசீரமைக்க இலங்கை இணக்கத்தை எட்டியது.
சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு, வணிக கடன் வழங்குநர்கள், சர்வதேச பிணை முறிதாரர்கள் ஆகியோரு டன் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் மூலம் இலங்கை 1,750 கோடி டொலர்கள் பெறுமதியான கடன் களை மறுசீரமைக்க முடியும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள் ளது.
இதன்மூலம் வட்டி வீதங்களை குறைப்பதற்கும் நாட்டின் நிதியியல் கட்டமைப்பை உறுதிப் படுத்துவதற்கும் முடியும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 21- ஜூலை 2ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்கம் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பேச்சுகளை நடத்தியிருந்தது.
இந்தப் பேச்சுகளில் சட்ட மற்றும் நிதியியல் ஆலோசகர்களான கிளிபோர்ட் சான்ஸ், லிஸார்ட் வைட் அன்ட் காஷ், ரொத்ஸ் சைல்ட் அன்ட் கோ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதேபோன்று இலங்கையின் பிணைமுறிகளில் 50 சதவீத பிணைமுறிகளின் உரித்தாளர்களான 10 முக்கிய தரப்பினரை உள்ளடக்கியிருக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவின் நிர்வாகக்குழு கடந்த ஜூன் 27 - 28ஆம் திகதிகளில் பாரிஸில் கலந்துரையாடலை நடத்தி யிருந்தது.
இவற்றைத் தொடர்ந்து, கடந்த ஜூலை முற்பகுதியில் கடன் ஸ்திரத் தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கைக்கும் சர்வதேச பிணை முறிதாரர் குழுவினருக்கும் இடையில் 370 கோடி டொலர்கள் பெறுமதியான மொத்த சர்வதேச கடன்களில் ஆயிரத்து 250 கோடி டொலர்கள் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகளை மறுசீர மைக்கவும் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.