கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மோடி என்ன செய்தார்? என்று கேட்ட பொலிஸார்

7 months ago

மோடியின் வெற்றிக்காக யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டோரிடம், மோடிஉங்களுக்கு என்ன செய்தார்? என்று பொலிஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மோடியின் வெற்றியையடுத்து, யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு அருகில் சிவசேனை அமைப்பினர் வெடிகொளுத்தி, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, பொலிஸார் அங்கு வந்துள்ளனர்.

இதன்போது, கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், 'மோடி உங்களுக்கு என்ன செய்தார்?' எனப் பொலிஸார் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களைப் பார்த்துக் கேட்டுள்ளனர்.

அதற்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டோர் 'இலங்கை கடும் பொருளாதார இந்தியப் பிரதமராக விருந்த மோடி தான் பெரும் நிதி உதவி செய்து நாட்டைக் காப்பாற்றினார்' என்று சிங்கள மொழியில் சொல்லியிருக்கின்றனர்.

இந்தப் பதிலைக் கேட்ட பொலிஸார் பதில் கூறமுடியாமல், சிரித்து மழுப்பியவாறே அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

அண்மைய பதிவுகள்