வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று(09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

5 months ago

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று(09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டதை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பெயர் பலகை பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றினை காட்சிப்படுத்தியதோடு அதற்கு தக்காளிப் பழத்தினை எறிந்து தமது எதிர்ப்பினையும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு தெரிவித்திருந்தனர்.

இதன்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தி இருந்ததோடு 2 இலட்சம் இலஞ்சம் நாங்கள் கேட்கவில்லை இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைக்கு நீதியை கேட்கிறோம் என்ற வாசகங்களும் எழுதி இருந்தனர்.