திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக 3 புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவிப்பு
1 month ago
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக அடுத்த காலாண்டில் 3 புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நேற்று (04) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குற்றச் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறினார்.