
அரசியல்வாதிகள், தனிநபர்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துகளை கைப்பற்றுவதற்காக புதிதாக ஓர் அமைப்பை அரசாங்கம் நிறுவவுள்ளதாக அறிய வருகிறது.
அரசியல்வாதிகள், தனிநபர்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துகள் தொடர்பில் தகவல் சேகரிக்கவும் அந்த சொத்துகளை பறிமுதல் செய்யவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று அரச உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அமைப்பு 'சொத்து மீட்பு' அமைப்பு என்று அழைக்கப்படும்.
உலகின் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இதுபோன்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் பணமோசடி மற்றும் பிற சொத்துகளில் இருந்து பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தை கண்டறிந்து, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் அரசாங்கம் ஏற்கனவே இரகசிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
