ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று அறியப்படும் ஹ்வால் டிமிர் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
4 months ago
ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று அறியப்படும் ஹ்வால் டிமிர் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு நோர்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்றின் உடலில் கமரா பொருத் தப்பட்டிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. அந்த திமிங்கலம் ரஷ்யாவின் செயின்ட் பீற்றர் ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட இந்த 14 அடி நீள முள்ள திமிங்கலம் ரஷ்ய உளவு திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஹ்வால்டிமிர் திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் திமிங்கலத்தின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.