இலங்கையில் சீரற்ற காலநிலை ஒருவர் தேடல், 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்.-- அனர்த்த பிரிவு அறிக்கை
1 month ago
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றார் என்றும் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக 1இலட்சத்து 38ஆயிரத்து191 குடும்பங்களைச் சேர்ந்த 4இலட்சத்து 63ஆயிரத்து 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 31ஆயிரத்து 80 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 101 வீடுகள் முழுமையாகவும், 2ஆயிரத்து567 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித் துள்ளது.