இணைந்த வடக்கு - கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்துக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என நாமல் தெரிவிப்பு.

4 months ago


வடக்கு - கிழக்கை இணைக்க அனுமதிக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் ஜனா திபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பேருவளையில் இடம் பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இணைந்த வடக்கு-கிழக்கில் அதிகாரப் பகிர்வு என்ற விடயம் தற்போது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இணைந்த வடக்கு - கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்துக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு- கிழக்குக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக் கது.