பூநகரி பொன்னாவெளி சுடுகாடாய் மாறவுள்ளது.
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது வழிகாட்டி, தத்துவம் எனது வரலாறு". பெரிசு சும்மாவா சொன்னது. இயற்கையை நேசிப்பவன் தாய் மண்பற்றுள்ளவன்.
பொன்னாவெளி எவ்வளவு பெரிசோ அந்தளவுக்கு சுண்ணக்கல் அகழ்வுப் பிரச்சினையும் பெரிசாக உள்ளது. சுண்ணக்கல் அகழ்வால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
கனிய வளத்திணைக்களம் உட்பட 11 திணைக்களங்கள் பொன்னாவெளி கிராமத்தில் முதற்தடவையாக சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளவுள்ள இடத்திற்கு சென்றிருந்த போது மக்கள் எதிர்ப்பால் திரும்பினர் என்ற செய்தி கேட்டிருப்பியள். ஆனாலும் இங்கே அகழ்வை தடுக்க எவராலும் முடியாது என்ற செய்தியை விரைவில் கேட்பீர்கள்.
முருகைக்கற்களை அகழ்வதற்கு அரசாங்கம் டோக்கியோ சிமெந்து நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 1,200 ஹெக்டேயர் நிலப்பரப்பளவில் அகழ அனுமதியாம், கரையோரங்களில் 300 மீற்றர் வரையான ஆழத்தில் சுண்ணக்கல் அகழ்வு, இது சம்பந்தமாக டோக்கியோவுடன் கதைக்க முடியாதாம், அமைச்சருடன் கதைக்கட்டாம்.
யாழ்ப்பாண பாறை அமைப்பு
யாழ்ப்பாண பாறை அமைப்பு மயோசின் கால சுண்ணக்கல் வகைக்குரியதாவும், இளமடிப்பு பாறை வகைக்குரியதாகவும் காணப்படுவதால் அகழ்வுகளால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று சூழலியலாளர்கள் அபாய மணி அடித்துள்ளனர்.
யாழில் இருந்து அகழப்பட்ட சுண்ணக்கற்கள்
யாழ்.வலிகாமம் வடக்கில் அதிகளவான சுண்ணக்கற்கள் அகழப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டன. கீரிமலை பிரதேசத்தில் சுண்ணக்கல் அகழப்பட்டமைக்கான சாட்சியாக குழி உள்ளது. இந்த குழியை மூட முடியவில்லை. பொன்னாவெளியில் அகழ்வு இடம்பெற்றால் அந்தக் குழியும், இதற்கு அனுமதி கொடுத்தால் இன்னும் எத்தனை குழிகள்.
சுண்ணக்கல் அகழ்வால் ஏற்படும் பிரச்சனைகள்
சுண்ணக்கல் அகழ்வால் வெப்பநிலை அதிகரிப்பும், வறட்சியும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உடையாமல் இருக்கும் 100 கன அடி அளவுள்ள சுண்ணாம்புப் பாறை 10 கன அடி நீரினை உறிஞ்சி வைத்திருக்கும் தன்மை கொண்டதாக சொல்லப்படுகிறது.
எனவே 1 கியூப் கற்கள் உடைத்து எடுக்கப்படுமாயின் 10 கன அடி நீர் (62.4 கலன்கள்) வெளியேற்றப்படும். இதனால் குடிதண்ணீர், விவசாயம் அனைத்திற்குமே குந்தகம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
காங்கேசன்துறையில் சிமெண்ட் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை. பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆணையிறவில் இருந்து பரந்தன் வரையான பகுதியில் புல்,பூண்டுகள் முளைக்க முடியாத அளவுக்கு உப்பு படிவுகள் படியத் தொடங்கின. போர் இடம்பெற்றதால் 40 ஆண்டுகளாக அந்த தொழிற்சாலை இல்லாமல் போனதன் பிற்பாடுதான் இப்போது அந்தப் பிரதேசம் சற்று பச்சைப் பசேலென தெரிகிறது.
காங்கேசன்துறை தொழிற்சாலையால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய யாழ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு