யாழ்.கோப்பாய் அரச வங்கியில் நிலையான வைப்பிலிட்ட பணத்தை, மோசடி செய்த முகாமையாளர் ஒருவருக்கு விளக்கமறியல்
1 month ago

யாழ்.கோப்பாய் அரச வங்கியில் நிலையான வைப்பிலிட்ட பணத்தை, தவறாகக் கையாண்டு மோசடி செய்த முகாமையாளர் ஒருவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பிரதேசத்தில் இயங்கி வந்த அரச வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக, பணத்தின் உரிமையாளரால் (நிலையான வைப்பிலிட்டவரால்) யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அந்த முகாமையாளர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
