முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் எரிந்துள்ளன.

3 months ago


முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் எரிந்துள்ளன.

இந்த சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றுமே தீயில் எரிந்துள்ளது.

இதன்போது குறித்த வீதிவழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல்வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகிப் போகின.

குறித்த சம்பவம் திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு மின்சார சபையினர் , தடயவியல் பொலிஸார் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.