தடுப்பூசிகளால் அரசாங்கத்துக்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் - மருத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிப்பு
10 months ago
முறையற்ற முகாமைத்துவம் இன்றி கொள்வனவு செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசிகளால் அரசாங்கத்துக்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் குறித்த மருத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாப் பெருந்தொற்று காலப் பகுதியில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 75 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளன.
இதனால் அரசாங்கத்துக்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
உரிய முகாமைத்துவம் இன்றி. மிதமிஞ்சிய அளவில் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டதால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
காலாவதியாகிய சுமார் 75 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் அண்மையில் அழிக்கப்பட்டுள்ளன என்றும் மருத்துவ தொழிற் சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
