ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிக்கு ஆயுதம் தரித்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு.
7 months ago

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும்போது ஆயுதம் தரித்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் படவுள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
பொலிஸ் தேர்தல் பணிமனை இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லும் வாகனம் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆயுதம் தரித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். இந்த வாகனங்களின் முன்னாலும் பின்னாலும் பொலிஸ் வாகனங்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
