அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மற்றுமொரு போர்க் கப்பல் திங்கட்கிழமை (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

1 month ago



அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மற்றுமொரு போர்க் கப்பல் திங்கட்கிழமை (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சேவை மற்றும் வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருகை தந்த யு.எஸ்.எஸ். ஸ்புரூன்ஸ் கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ஏவுகணை எதிர்ப்பு வகைக் கப்பலான யு.எஸ்.எஸ். ஸ்புரூன்ஸ் 160 மீற்றர் நீளமுடையதாகும்.

334 பணியாளர்களைக் கொண்டுள்ள இக் கப்பலின் கப்டனாக தோமஸ் அடாம்ஸ் செயற்படுகின்றார்.

இக்கப்பல் சேவை மற்றும் வழங்கல் தேவைகளை நிறைவு செய்து கொண்டு செவ்வாய்கிழமை (19) நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

இதேபோன்று அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ் மைக்கேல் மர்பி என்ற போர்க் கப்பலொன்று கடந்த சனிக்கிழமை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்