விஜித ஹேரத் கூடுதல் வாக்குகளைப் பெற்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்தார்.

1 month ago





விஜித ஹேரத் கூடுதல் வாக்குகளைப் பெற்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விருப்பு வாக்கு பட்டியலில் 7 இலட்சத்து 16 ஆயிரத்து 715 வாக்குகளைப் பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சாதனையை முறியடித்துள்ளார்.

விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தலில்            வேட்பாளர் ஒருவர் விருப்பு வாக்குகளில் பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளாக விஜித ஹேரத்தின் விருப்பு வாக்குகள் காணப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராக இருந்தார்.

அந்தச் சாதனையையே விஜித ஹேரத் முறியடித்துள்ளார். 

அண்மைய பதிவுகள்