
குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோதே அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.
1,996 வீட்டு அலகுகளை நிர்மாணித்து, 03 தொகுதியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சீன அரசால் பெயர் குறித்துள்ள விலை மனுதாரர்கள் 08 பேரிடம் விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த விலை மனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்காக கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
