இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட 8 பேரை காலி பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர்.
காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடத்தை சோதனையிட்ட போது இந்த வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் 24 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் 6 பேர் சீன பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற இருவரும் கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 9 கணனிகள், 73 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெருந்தொகை சிம் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.