ஹமாஸ் அமைப்பு மூன்று பணயக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.

2 hours ago


ஹமாஸ் அமைப்பு மூன்று பணயக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது.

ரோமிகோனேன், டோரன் ஸ்டெய்ன் பிரெச்சர்,எமிலி டமரி ஆகிய மூன்று பெண் பணயக் கைதிகளே ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.

இவர்களை 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்திருந்தது.

காசா நகரின் அல்சரயா சந்தியில் இவர்களை ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றவேளை பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்.

ஹமாஸ் மூன்று பணயக் கைதிகளை ஒப்படைத்துள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது.

இறுதியாக கிடைத்த தகவல்களின்படி இவர்களை செஞ்சிலுவை சங்கம் இஸ்ரேலிய இராணுவத்திடம் கையளித்துள்ளது.

அண்மைய பதிவுகள்